மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு ராசி நாதன் செவ்வாய் 15 நாட்களுக்கு இரண்டாம் வீட்டிலும், பிற்பகுதியில் செவ்வாய் மூன்றாவது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவது புதிய சிறப்பு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும். பயணங்கள் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். ஆக இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக அமையும்.
ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு ராசிநாதன் நீசபசங்கம் அடைந்திருப்பது சிறப்பாக இருக்காது. புதிய முயற்சிகளுக்கு தடைகள் வரலாம். மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் வெற்றிகளும் யோகங்களும் தேடி வரும். பெண்களால் நன்மைகள் உண்டு. சிறப்பான வெற்றிகள் இருக்கும். திருமணத்திற்காக வரன் பார்க்கலாம். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆக இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும்.
மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு சிறப்பான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ராசிநாதன் புதன் உச்ச நிலையில் பயணம் செய்கிறார். நன்மைகள் அதிகம் நடைபெறும். மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். திருமண தம்பதிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில உபாதைகள் வந்து போகும். ஆக இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும்.
கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு குருபகவான் பார்வையால் சிறப்பான அற்புதங்களை தரப்போகிறார். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மூன்றாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் நீச்ச நிலையை அடைந்தாலும் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது சிறப்பான அமைப்பாகும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். உங்களுக்கு பொருளாதாரம் வளம் நிறைந்த மாதம் ஆகும். புதிய முயற்சிகள் கைகூடும். ஆக இந்த மாதம் உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய மாதமாக அமையும்.
சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு ராசிநாதன் சூரியன் குருவின் பார்வையில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருப்பது சிறப்பம்சமாகும். தன வரவு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் ராசி நாதன் சூரியன் நீச்ச நிலையை அடைந்தாலும், நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது சிறப்பான அமைப்பாகும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய முதலீடுகள் மூலம் திடீர் லாபம் கிடைக்கும். மதிப்பு மரியாதையை கூடும்.வண்டி, வாகனம் வாங்க யோகம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை மற்றும் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. ஆக இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு சில அற்புதங்களை நிகழ்த்தும். நினைத்தது நிறைவேறும். குருபகவானின் பார்வையால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வராக்கடன்கள் வந்து சேரும். வேலையிடத்தில் முக்கிய பொறுப்புகள் வரும். நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். திடீர் பணவரவு உண்டாக வாய்ப்பு அதிகம். இந்த மாதம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து சென்றால் இந்த மாதம் சிறப்பாக அமையும்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு சின்ன சின்ன தடைகள் ஏற்படலாம். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரபோகிறார். வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறார். மாத பிற்பகுதியில் நல்ல பலன்களை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் மூலம் வெற்றி கிடைக்கும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வண்டி, வாகனம், வீடு வாங்க யோகம் உண்டு. உடன் பிறந்தவர்கள் மூலம் சந்தோசம் ஏற்படும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை வரலாம். புதிய திருப்பங்கள் ஏற்படக்கூடிய மாதமாக அமையும்.
விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு ராசி நாதன் செவ்வாய் பகவான் பார்வையும், குருபார்வையும் சாதகமான பலன்களை தரும். வெற்றிகள் தேடி வரும். எந்த வேலையிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். வெளியூர் செல்லும் பயணங்களில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெரும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உற்சாகம் அதிகரிக்கும். ஆக இந்த மாதம் உங்களுக்கு மனதில் நிம்மதி நிறைந்த மாதமாக அமையும்.
தனுசு : (DHANUSHU) தனுசு ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு அற்புதமான பலன்களை தரும். புதிய வேலை கிடைக்கும். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் தேடி வருவார்கள். குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு குறையும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பண முதலீடுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் தரும் மாதமாக அமையும்.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஒருவித சிக்கலில் இருந்த உங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். எதைக்கும் சமாளிக்கும் பக்குவம் வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவை பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உடல் நலனில் சில உபாதைகள் வந்து போகும். இந்த மாதம் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் நீங்கள் எதிலும் கவனமுடனும், நிதானமாகவும் இருக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பேச்சு வார்த்தையில் கணவன் தேவை. எதையும் செய்யும் போது யோசித்து செய்யவும். அகலக்கால் வைக்க வேண்டாம். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. பங்கு சந்தை, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆக இந்த மாதம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு குருபகவான் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சுக்கிரன், சூரிய கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைக்கிறது. இதனால் இந்த மாதம் உங்களுக்கு ராஜயோகம் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. திடீர் பணவரவு இருக்கும். கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வந்து போகும். காதல் விவகாரங்கள் சுமாராக இருக்கும். சில விஷயங்களை யோசித்து செய்வது நல்லது. பொறுமையை கையாள்வது அவசியம். உடல் நலனில் அக்கறை காட்டவும்.