மிதுனம் :(MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். இந்த மாதம் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும் மாதமாக உள்ளது. இந்த கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகள் எதிர்மறையான பாதிப்பு ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. பணவரவு அதிகரிக்கும். வரவுக்கு மீறி செலவுகள் அதிகமாக இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகளால் பணத்தை சேமிக்க வாய்ப்பு இல்லாமல் போக வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் மன உளைச்சல் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சில கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உடல் நலனில் சில உபாதைகள் வந்து போகும்.
பரிகாரம் : ஹனுமான் கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும். பசுவிற்கு உணவு அளிக்கவும்.
கடகம் :(KADAGAM) கடக ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். வாழ்க்கை தரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். தொழிலில் சரியான திட்டமிடல் மூலம் பலன்களை பெறலாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற சவால்கள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த மாதம் சில பிரச்சனைகள் வந்து போகும். இதனால் மனதில் நிம்மதியற்ற நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. பேச்சில் கவனம், நிதானம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
பரிகாரம் : சிவபெருமான் கோவிலுக்கு சென்று வரவும்.
கன்னி :(KANNI) கன்னி ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதிசார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்வது நல்லது. காதல் தொடர்பான விஷயங்களில் சில சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே சில வாக்கு வாதங்கள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார ரீதியாக கலவையான பலன்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் விஷ்ணுவை வணங்கவும். உணவு தானம் செய்யவும்.
மீனம் :(MEENAM) மீன ராசி அன்பர்களே அக்டோபர் மாதம் நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக சில நல்ல முடிவுகள் காரணமாக லாபம் கிடைக்கும். வங்கி, மருத்துவம், சந்தைப்படுத்துதல் துறையுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏதாவது ஒரு குழப்பப்பமான சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது பேச்சில் நிதானம் தேவை. காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில உபாதைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை.
பரிகாரம் : காத்யாயனி தேவியை வணங்கவும்.