Header Ads Widget

<

புரட்டாசி மாத ராசி பலன் 2022 - PURATTASI MATHA RASI PALAN 2022 IN TAMIL



மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் உங்களுக்கு குதூகலமாக இருக்கும். தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் சிறிய பிரச்சனைகள் வந்து போகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் அடையலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் துறையில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். செல்வ  நிலை உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சில நேரங்களில் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். பரிகாரம் : அம்மாவாசை நாளில் தானம் செய்யவும். விநாயகர், துர்கை அம்மனை வழிபடவும்.

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். இந்த மாதம் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய  தொழில் தொடங்கலாம். செல்வம் பெருகும். பணவரவு அதிகரிக்கும். திருமண யோகம் உண்டு.  காதல் விவகாரத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் மட்டும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறப்புக்களால் நன்மையான பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலும், பணியிடத்தில் மதிப்பு மரியாதையை உயரும். மாணவர்களுக்கு கல்வி தரம் உயரும். உடல் ஆரோக்கியம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். பரிகாரம் : பிரதோஷ நாளில் நந்தியை வணங்கவும். வராகி அம்மனை வழிபடவும்.

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் உங்களுக்கு புதனின் உச்சத்தால் கௌரவம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்தில் சில பிரச்சனைகள் வரலாம். நண்பர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். உடன்பிறப்புகள் மூலம் சில செலவுகள் வரும். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசைய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை தேவை. பரிகாரம் :  திருமோகூர் காளமேக பெருமாளை வழிபடவும்.

கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் குருவின் பார்வை இருப்பது நல்ல பலன் அளிக்கும். சகோதரர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். இதனால் சில மன உளைச்சல்கள் ஏற்படும் . தொழிலில் புதிய முயற்சி வெற்றி அடையும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டு. தொழில், வியாபாரங்களில் லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 7ம் வீட்டில் சனி இருப்பதால் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பரிகாரம் : விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும். சனிபகவானை வழிபடவும்.

சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் சனி ஆறாம் வீட்டில் இருப்பதால் ராஜா யோகம் உண்டு. சுற்றத்தார்  மத்தியில் புகழ், கௌரவம், அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உற்சாகம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடன் பிறப்புகள் மூலம் சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் விலகும். சுப செலவுகள் வர வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கடின உழைப்பால் உடல் சோர்வு ஏற்படும். பரிகாரம் : அம்மனை வழிபடவும்.

கன்னி : (KANNI) கன்னி  ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் புதனின் உச்சத்தால் தொழில் சிறப்பாக இருக்கும். 2ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறிய சண்டைகள் வரலாம். பொறுமையை கடைபிடிப்பது அவசியம். சுய தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளை எடுப்பதில் நிதானம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். குழந்தை பாக்கியம் உண்டு. சகோதர வழியில் நன்மை கிடைக்கும். பெற்றோர்கள் வழியில் நல்ல செய்தி வரும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். பணவரவு அதிகரிக்கும்.  பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். பரிகாரம் : பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை கொடுத்து வணங்கவும். சூரிய வழிபாடு செய்யவும்.

துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் அதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது சிறப்பான பலன் அளிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் சில பிரச்சனைகள் வந்து போகும். பொறுமையாக இருப்பது நல்லது. தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். சுப செலவுகள், குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர்கள் வழியில் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வி மேம்படும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போக்குவரத்து தொழிலில் நல்ல லாபம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். பழைய முதலீடுகள் நல்ல பலன் அளிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாள் இருந்த பிரச்சனை படிப்படியாக விலகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பரிகாரம் : நாராயண பெருமாளை வழிபடவும்.

விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சக ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் அதிபதி செவ்வாய் பார்ப்பது சிறப்பான மாதமாக இருக்கும். ஆன்மீக பயணம் உண்டு. வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சந்தோசம் பெருகும். நட்பு மற்றும்  உறவினர்கள் வட்டாரத்தில் உங்களின் மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் துறையில் பெரிய வளர்ச்சி உண்டு. வருமானம் உயரும். நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். பரிகாரம் : கலைவாணியை வழிபடவும்.

தனுசு : (DHANUSU) தனுசு ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். புதன் மற்றும் சூரியன் குரு பார்வையில் இருப்பதால் நல்ல பொருளாதார மாற்றம் உண்டு. கணவன், மனைவி உறவில் பிரச்சனை இருக்காது. தேவையற்ற பேச்சை குறைப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு உருவாகும். பூர்வீக சொத்துக்களில் சில பிரச்சனைகள் வரலாம். திருமண பாக்கியம் கைகூடி வரும். வீட்டில் சிறிய சண்டைகள் வந்து போகும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் கெளரவம்  பதவி கிடைக்கும். வண்டி வாகனம் வாங்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பரிகாரம் : மகாளய அமாவாசை நாளில் தானம் செய்யவும். பட்டமங்கலம் சென்று வரவும். விநாயகரை வழிபடவும்.

மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் உங்களுக்கு திருப்புமுனையாக அமையும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை திருமணமாக மாற வாய்ப்பு உண்டு. திருமண பாக்கியம் உண்டு. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டு. சொந்தத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வித்தரம் உயரும். தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு ஓரளவு இருக்கும். வண்டி வாகன செலவுகள் உண்டு. குருவின் சாதகமான பார்வை முக்கிய பொறுப்புகள் அளிக்கும். தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை. மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. பரிகாரம் :  திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வணங்கவும்.

கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் உங்களுக்கு மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். வாழ்க்கை துணையின் மூலம் பொருளாதார வரவு இருக்கும். கணவன், மனைவி உறவில் சில சண்டைகள் வந்து போகும். பொறுமையை கையாள்வது அவசியம். உடன் பிறந்தவர்களிடம் இருந்து மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு. திருமண குறித்த தகவல்கள் வரும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. வீடு போன்ற சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில குறைபாடுகள் ஏற்படலாம். பரிகாரம் : நரசிம்மரை வழிபடவும்.

மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே புரட்டாசி மாதம் வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல பலன்களை பெறலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. வண்டி வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய முடிவுகளை யோசித்து செய்வது நல்லது. குழந்தை பாக்கியம் உண்டு. பணியிடத்தில் வேலைப்பளு அதிகாரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு கல்வித்தரம் மேம்படும். எதிலும் போராட வேண்டியிருக்கும். பணவரவு ஓரளவு இருக்கும். செலவுகளில் சிக்கனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சில உபாதைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பரிகாரம் : கள்ளழகர் பெருமாளை வழிபடவும்.