Header Ads Widget

<

அக்டோபர் மாதம் மேஷ ராசி பலன் 2022 - OCTOBER MONTH MESHA RASI PALAN 2022



மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே அக்டோபர் மாத துவக்கத்தில் எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்யுங்கள், அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருப்பது  நல்லது. தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வீண் பேச்சை தவிர்க்கவும். மாத பிற்பகுதியில்  பல வழிகளில் சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களை பெறலாம். இந்த மாதம் வேலையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். ஐந்தாம் வீட்டின் அதிபதியான சூரியன் அக்டோபர் மாதத்தில் முதல் பாதியில் சுக்கிரன் மற்றும் புதனுடன் சேர்ந்து உங்களின் ஆறாம் வீட்டில் சூரியனும், புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை கொடுக்கும். மாத கடைசியில் பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை. கலவையான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காதல் கைகூடும். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகும். திருமணமான தம்பதிகளுக்கு சில சிக்கல்கள் வந்து போகும். மாத பிற்பகுதியில் திருமண தடைகள் நீங்கும்.  குழந்தை பாக்கியம் உண்டு. பணவரவுகள் ஏற்றம் இறக்கமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் காரணமாக செலவுகள் அதிகரிக்கும். வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் இருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். பொதுவாக மாத பிற்பகுதியில் மிகவும் நன்மையான பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம் : அன்னதானம் செய்யவும். பெருமாளை வழிபடவும்