Header Ads Widget

<

இன்றைய ராசி பலன்கள் 07.09.2022 - TODAY RASI PALAN 2022 | DAILY RASI PALAN SEPTEMBER 07


மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராத கடன்கள் வந்து சேரும். உங்கள் உடல்நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணியிடத்தில் மதிப்பு கூடும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதமாகமான சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் ஆபரணம் வாங்க வாய்ப்புகள் உண்டு. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன் மனைவி உறவு மேம்படும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாக வைத்து கொள்ளுங்கள். பணவரவு அதிகரிக்கும். 

மிதுனம் : மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நீங்கள் நினைச்சது நடக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. இன்று உங்கள் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் உதவி கிடைக்கும். கணவன் மனைவி அன்பு அதிகாரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


கடகம் :
கடக ராசி அன்பர்களே இன்றைய நாள் எதிலும்  கவனமுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது. வாகனங்களில் வெளியில் செல்லும் போது கவனம் தேவை. பணத்தை கையாள்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே சில பிரச்சனைகள் வரலாம். பேச்சில் கவனம் தேவை. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இன்று பொறுமையுடனும், அமைதியாகவும் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சிம்மம் : சிம்ம ராசி அன்பர்களே இன்று சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் மற்றும் வெளியூர் வெளிநாடு தொடர்பு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் உண்டாவதை தவிர்க்கவும். மாணவர்களின் கல்விக்காக செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.


கன்னி :
கன்னி ராசி அன்பர்களே இன்றைய நாள் குடும்பத்தில் நல்ல நிலை உண்டாகும். உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் நல்ல அனுகூலம் உண்டாகும். உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல வருமானம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடன் ஆரோக்கியம் மேம்படும்.


துலாம் : துலாம் ராசி அன்பர்களே இன்றைய நாள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றிபெறும். திருமண சுப நிகழ்ச்சிகள் கைகூடும். இன்று பொறுமையும், அமைதியும் கடைபிடிப்பது நல்லது. வீண் செலவுகளை குறைப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கும். உடல் நலனில் கவனம் தேவை.

விருச்சிகம் : விருச்சிக ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வரலாம். எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலை செய்பவர்களிடம் நிதானமாக நடந்து கொண்டால்  பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இன்று எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் உடல் நலனில் கவனம் தேவை. 

தனுசு : தனுசு ராசி அன்பர்களே இன்றைய நாள் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போது குழப்பங்கள் வரலாம். புதிய முயற்சிகள் மற்றவர்கள் மூலம் தடைபட வாய்ப்பு உள்ளது. எதையும் யோசித்து செய்வது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவி விட்டு கொடுத்து சென்றால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று சில விசயங்களில் தடைகள் வரலாம். 


மகரம் : மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான முடிவுகளை தரும். நினைத்த காரியம் கைகூடும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய கடின உழைப்பு மூலம் நல்ல லாபம், வெற்றி கிடைக்கும். பொன், பொருள் ஆபரணம் வாங்க வாய்ப்பு அதிகம். காதல் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.


கும்பம் : கும்ப ராசி அன்பர்களே இன்றைய நாள் தொழில் வியாபாரத்தில் நல்ல நிலை ஏற்படும். சுப செய்திகள் வீடு தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். சில பணிகளுக்காக அலைச்சல்கள் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நல்ல பலனை அடைவீர்கள். பணியிடத்தில் மதிப்பும் மரியாதை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டு.


மீனம் : மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.