Header Ads Widget

<

இன்றைய ராசி பலன் 10.09.2022 - INDRAIYA DAILY TODAY RASI PALAN 10.09.2022



மேஷம் : (MESHAM) மேஷ ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி தரும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரங்களில் உங்களின் கடின உழைப்பால் நல்ல ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சுமூக உறவு மேம்படும். பணவரவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெறுவீர்கள். உழைப்பிற்கேற்ற நல்ல லாபம் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவி உறவு மேம்படும். பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது  அவசியம். இதனால் பல நல்ல பலன்களை அடையலாம். தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலை ஏற்படும். எந்த வேலையிலும் கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம் : (KADAGAM) கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் அமைதியும் பொறுமையும் கடைபிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வெற்றி பெற வேண்டுமென்றால் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி நண்பர்களே இன்று நீங்கள் எந்த வேலையும் விரைவாக முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பொன், பொருள், ஆபரணம் வாங்க எண்ணம் வரும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. பணவரவு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கன்னி : (KANNI) கன்னி ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு புதிய முயற்சிகள் மேன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சில மனக்குழப்பங்கள் வந்து போகும். மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டும்படி பணிகளை செய்து முடிப்பீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். சிக்கனமாக செலவு செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

துலாம் : (THULAM) துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.இன்று சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். குடும்ப உறுப்பினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் :  பழுப்பு 

விருச்சிகம் : (VIRUCHIGAM)விருச்சிக ராசி நண்பர்களே இன்று தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பணி சம்பந்தமான விஷயங்களில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். மருத்துவ செலவு செய்ய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு : (DHANUSU) தனுசு ராசி நண்பர்களே இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து  வைக்கும் எண்ணம் உருவாகும். உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மகரம் : (MAGARAM) மகர ராசி நண்பர்களே இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. வராக்கடன்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோசம் உண்டாகும். நிலுவையில் இருந்த வேலை முடுவுக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில்  நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம் : (KUMBAM) கும்ப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாத சூழல் உருவாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பணியிடத்தில் பொறுமையை கடைபிடித்தால் வீண் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மீனம் : (MEENAM) மீன ராசி நண்பர்களே இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் கடும் போட்டி இருக்கும். உங்களின் கடின உழைப்பால் அதை சமாளிப்பீர்கள். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வரவுக்கேற்ற செலவும் இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல வாய்ப்பு உண்டு. வீண் பதற்றத்தை தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம் : பச்சை