மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் வழக்கத்தை விட மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். வேலைகள் சிறப்பாக நடக்கும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டியதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு அமையும். பணவரவு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனதில் நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் : (RISHABAM)ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு புதிய உற்சாகமும் நிம்மதியும் இருக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை உங்களுக்கு நல்ல பலனை தரும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி பாராட்டை பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோசம் பெருகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பால் மனதில் உற்சாகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் சோர்வாக இருப்பீர்கள். பணத்தை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் பொது நிதானம் வேண்டும். எதிலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. இன்று சில உடல் உபாதைகள் வர வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இன்றைய நாள் எந்த விசயத்தையும் யோசித்து செய்யவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. பணவரவு ஓரளவு இருக்கும். குடும்ப வாழ்க்கை சராசரியாக இருக்கும். காதலிப்பர்களுக்கு சில குழப்பமான சூழ்நிலை உருவாகும். மருத்துவ செலவு செய்ய வாய்ப்பு உண்டு. இன்று பொறுமையும், அமைதியும் கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சில தடைகள் வரலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சரியான திட்டமிடல் மூலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். இன்று செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. காதல் கைகூடும் நாள் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் மூலமாக மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இனிமையான நாளாக அமையும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இன்று சில தேவையில்லாத குழப்பங்கள் வரும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் வாக்குவாதம் உண்டாக வாய்ப்பு உண்டு, ஆகையால் பொறுமையை கையாள்வது அவசியம். தொழில் மற்றும் வியாபாரங்களில் கடின உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். காதல் கசக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன உபாதைகள் வந்து போகும். உடல் நலனில் கவனம் தேவை.
விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே இன்று பொறுமையுடன் இருந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவை. பணத்தை திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடலில் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் கவனம் தேவை.
தனுசு : (DHANUSU) தனுசு ராசி அன்பர்களே இன்று பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு காரனாக மனஅழுத்தம் உண்டாகலாம். உங்களின் கடின உழைப்பால் குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். காதல் செய்பவர்களுக்கு முக்கிய முடிவு எடுக்கும் நாள் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே இன்று உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவி மூலம் பணிச்சுமை குறையும். உங்களின் நேர்மையான அணுகுமுறை காரணமாக தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோசம் பெருகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு சாதகமான பலனை தரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். மாணவர்களின் கல்வி மேம்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. கணவன், மனைவி உறவில் பொறுமையை கையாள்வது அவசியம். காதல் கசக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே இன்று பணியிடத்தில் புதிய முயற்சிகள் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். பொன், பொருள், ஆபரணம் வாங்க வாய்ப்பு உண்டு. பணவரவு அதிகரிக்கும். பணத்தை சேமிக்கும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. பொறுமையை கடைபிடிப்பது அவசியம். வரவுக்கேற்ற செலவுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.