மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நாள் ஆகும். உங்கள் திறமையை நிரூபிக்கும் நாளாக அமையும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே சுமூக உறவு மேம்படும். புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் நினைத்த காரியத்தில் வெற்றி அடையலாம். பண வரவு அதிகரிக்கும். பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள். கூட்டு முயற்சிகளிலும், சந்தேகமான நிதி திட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்கள் கடின உழைப்பின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி தரம் உயரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இன்றைய நாள் யாரிடமும் பேசும் போது கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி விட்டு கொடுத்து சென்றால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும்.
மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் புத்துணர்ச்சியுடன் சுறுசுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் விரைவாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில பணிச்சுமை அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பால் சவால்களை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் ஆகையால் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. இன்று சில உடல் நல பிரச்சனைகள் வரலாம். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.
கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதில் உள்ள பாரம் குறையும். உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். எதிலும் அவரசப்படாமல் யோசித்து செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். பணவரவுகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் வரும். யாரிடமும் பேசும் போது கவனம் தேவை.
சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். நிதானத்தோடு செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தடுக்கலாம். இன்று அமைதியும் பொறுமையும் கடைபிடிப்பது நல்லது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சாதகமான சூழல் உருவாகும்.
கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுடைய பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். முக்கிய முடிகளை எடுக்க நல்ல நாள் கிடையாது. வராத கடன்கள் வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற பேச்சை குறைத்து கொள்வதன் மூலம் சுமூக உறவு மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மருத்துவம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இன்று இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் நீங்கி உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாக வாய்ப்பு உண்டு. புதிய முயற்சியில் ஈடுபவர்கள் அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும். எதிலும் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணியிடத்தில் நன்மதிப்பு கூடும்.
விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே இன்றைய நாள் எந்த ஒரு செயலையும் எளிதாக முடிப்பீர்கள். சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நினைத்த காரியம் வெற்றி பெரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலை கிடைக்கும். இன்றைய நாள் காதல் கைகூடும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு : (DHANUSU) தனுசு ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் அவரசப்படாமல் நிதானமாக செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் வீண் பேச்சை குறைக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. மனதில் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். மறைமுக எதிரிகளை அறிந்து கொள்வீர்கள். இன்று பொறுமையும் அமைதியும் கடைபிடித்தால் சாதகமான பலன் கிடைக்கும்.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. எதிலும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து சுப செய்திகள் வரும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறும். கனவுகள் நிறைவேறும் நாள் ஆகும். இன்று வீண் கோபத்தை தவிர்க்கவும். எது நடந்தாலும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை.
மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களின் கடின உழைப்பால்,ஆதாயமும், பாராட்டும் கிடைக்கும். தனவரவு மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள், ஆபரணம் வாங்க யோகம் உண்டு. தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.