ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27ம் தேதி முதல் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி போட்டி செப்டம்பர் 11ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குரூப்பிற்கும் தலா 3 அணிகள் மோதும். அந்த வகையில் குரூப் ஏ வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் உள்ளன. தகுதிச்சுற்றின் அடிப்படையில் ஹாங்காங், குவைத், சிங்கப்பூர், அமீரகம் அணிகளிலிருந்து ஏதேனும் ஒரு அணி ஏ பிரிவில் சேர்க்கப்படும்.
ASIA CUP TIME TABLE 2022
GROUP A:
INDIA VS PAKISTAN - AUGUST 28, DUBAI
INDIA VS QUALIFIER - AUGUST 31, DUBAI
PAKISTAN VS QUALIFIER - SEPTEMBER 2, SHARJAH
GROUP B
SRI LANKA VS AFGHANISTAN - AUGUST 27, DUBAI
BANGLADESH VS AFGHANISTAN - AUGUST 30, SHARJAH
SRI LANKA VS BANGLADESH - SEPTEMBER 1, DUBAI
SUPER 4:
B1 VS B2 - SEPTEMBER 3, SHARJAH
A1 VS A2, SEPTEMBER 4, DUBAI
A1 VS B1, SEPTEMBER 6, DUBAI
A2 VS B2 SEPTEMBER 7, DUBAI
A1 VS B2 SEPTEMBER 8, DUBAI
B1 VS A2 SEPTEMBER 9, DUBAI
FINAL : SEPTEMBER 11, DUBAI
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. இரு அணிகளும் தற்போது நல்ல பலமுள்ள அணிகளாக திகழ்வதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.