Header Ads Widget

<

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மீண்டும் முழு ஊரடங்கு பள்ளி கல்லூரிகள் மூடல் - TAMILNADU LOCKDOWN LATEST NEWS TODAY



தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா மூன்றாவது அலையான ஓமிக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா மூன்றாம் அலை கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார். பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொரோனா பரவலை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும், மக்கள் கூட்டம் கூடும் சந்தைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ரயில்வே நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் முறைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கும்படியும் உத்திரவிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாலும், இதற்கிடையில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதாலும்  மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்த்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் முகவசம் அணிவது கட்டயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அந்ததந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்களும் வெளியாகியுள்ளன.

வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் தமிழக அரசு அறிவிப்பு