மிதுனம் : மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பத்தாம் வீட்டின் அதிபதி குரு தனது சொந்த மீன ராசியில் சஞ்சரிக்கிறார், இதன் காரணமாக உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் சில சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழ்நிலை அமையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் மன உளைச்சல் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவன குறைவு ஏற்படலாம், ஆகையால் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை இன்பம் துன்பம் சேர்ந்த கலவையாக இருக்கும். வீட்டில் சகோதர சகோதரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் சில தவறான புரிதல்கள் காரணமாக கசப்பான சூழ்நிலை ஏற்படும். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும். திடீர் பண வரவு மற்றும் பணம் தொடர்பான நல்ல விஷயங்கள் கைகூடி வரும். இந்த மாதம் ஆரோக்கியத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும். ஏனென்றால் உங்கள் ராசியிலிருந்து பன்னிரண்டாம் வீட்டில் உங்கள் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் இந்த நேரத்தில் இருப்பதால், உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான சுப பலன்களை தருவார்.
பரிகாரம் :
ஹனுமான் பகவானுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு பூந்தி லட்டு பிரசாதம் கொடுக்கவும். மாட்டிற்கு பச்சை புள் அல்லது அகத்தி கீரை கொடுக்கவும்.