மேஷம் : மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் சுக்கிரன் சூரியன் சேர்க்கை அற்புதத்தை ஏற்படுத்த போகிறது. வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம். புதன் ஆறாம் வீட்டில் உச்சமடைந்து வக்கிரமடைகிறார். இந்த மாதம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சனி பத்தாம் வீட்டில் வக்கிரமடைந்து இருப்பதால் பெரிய அளவில் தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை பணம் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நல்லது. பிட்காயின், பங்கு சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். புது வீடு குடி போக நல்ல மாதம். சொத்து, நகை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். காதல் கைகூடும் மாதமாக அமையும். திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். பெண்களுக்கு சுப விரயம் அதிகமாகும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி வரும்.
புதாத்திய யோகம் :
இந்த மாத பிற்பகுதியில் புதாத்திய யோகம் வரப்போகிறது. போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு அதிகம். உங்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும் இந்த மாதம் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
பரிகாரம் :
ஹனுமான் பகவானுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று பூந்தி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கவும். வானரங்களுக்கு வெல்லம், கடலை சாப்பிட கொடுக்கவும். அவ்வாறு செய்தால் துன்பங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.