Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் சிம்ம ராசிக்கு வரப்போகும் யோகம் - SEPETMBER MONTH SIMMA RASI PALANGAL 2022


சிம்மம் : சிம்ம ராசி அன்பர்களே! செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு பலன் அதிகரிக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். இந்த மாத பிற்பகுதியில் சூரியனின் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். மேலும் மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. இந்த மாதம்  சில  நேரங்களில்  நேர்மறை  எண்ணங்கள் உண்டாகும்.  நல்ல காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் தன்னம்பிக்கை தைரியம் கைகூடும்.


தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை, பணி விசயமாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை சில பிரச்சனைகள் வரும். ஆகையால் பொறுமையை கடைபிடிப்பதும் விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. இந்த மாதம் கையில் பணவரவு அதிகரிக்கும். பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.


குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு கிடைக்கும். இதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களை இந்த மாதம் தவிர்க்கவும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


மாணவர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். படிப்பில் முன்னேற்றம், உயர்கல்வி யோகம் கைகூடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அஜீரண கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே உடல் நலனில் கவனம் தேவை.


பரிகாரம் : ஞாயிற்று கிழமைகளில் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து சூரிய பகவானுக்கு தண்ணீர் வழங்கவும். ஏழைகள் மற்றும்  இயலாதவர்களுக்கு தானம் செய்யவும்.