மனிதனின் வயதான காலத்தில் வெள்ளை முடி வருவது இயற்கையான ஒன்றாகும். ஆனால் தற்போதைய காலத்தில் உணவு பழக்கவழக்கங்களினாலும், சத்து குறைபாடினாலும் மேலும் பல்வேறு காரணங்களினால் 20, 30 வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதனால் அதிக மன உளைச்சலை உண்டாக்குகிறது. ஒரு முறை நரைமுடி வந்துவிட்டால் அவை மீண்டும் கருப்பாக என்ன செய்வது என்று இங்கே பார்ப்போம்.
நரை மற்றும் வெள்ளை முடி இரண்டும் வருவதற்கு உங்கள் முடி நிறமியை இழப்பதால் உண்டாகும் பிரச்சனை ஆகும். நிறமியை குறைபாடு இருக்கும் போது முடி சாம்பல் நிறமாக மாறும் முற்றிலும் நிறமி இல்லாத போது அது வெள்ளையாக மாறும். ஒருவருக்கு வயதாகும் போது முடியின் ஒவ்வொரு இலையிலும் செலுத்தப்படும் நிறமியின் அளவு குறைகிறது. அதனால் தான் அது சாம்பல் நிறமாகவும் காலப்போக்கில் வெள்ளை நிறமாகவும் மாறுகிறது.
நரைமுடி கருப்பாக என்ன செய்வது என்ன செய்யக் கூடாது
1. ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 முதல் 8 மணிவரை தூங்குவது அவசியம். நல்ல தூக்கம் ஒரு மனிதனுக்கு முடி வளர்ச்சிக்கும், கருமையாவதற்கும் ஒரு காரணமாக இருக்கிறது.
2. புகை பிடிப்பவர்களுக்கு சீக்கிரமாக நரைத்து விடும். ஆகவே புகை பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.
3. உணவில் வைட்டமின் பி 12 அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவை முடிகளை கருமையாக்க முக்கிய பங்கு வகுக்கிறது. வால்நட், சூரியகாந்தி விதை, பீன்ஸ், கீரை, கருவேப்பிலை, கேரட், பேரிச்சம்பழம், நெல்லிக்காய், தானிய வகைகள், மீன், முட்டை, ஆட்டின் கல்லீரல், தயிர், பால், பிராக்கோலி, பாதம், உலர் திராட்சை போன்றவைகளில் அதிகளவு வைட்டமின்கள், புரத சத்து, இரும்பு சத்து உள்ளதால் இவற்றை நாம் உட்கொண்டு வந்தால் நரை முடி கறுப்பாகும், முடிக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து அடர்த்தியாக வளரும், முடி உதிர்வை தடுக்கும்.
4. டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும்.
5. அதிகமாக சிந்திப்பது, மன உளைச்சல், அதிக டென்ஷன் ஆகியவை முடி உதிர்வை உண்டாகும். ஆகையால் தினசரி தியானம் செய்து மனதை அமைதியாக வைத்து கொள்வது அவசியம்.
6. அதிகாலையில் சீக்கிரமாக எழுவது, தினசரி உடற்பயிற்சி முக்கியம்.
7. அதிகாலையில் 10 நிமிடமாவது உடம்பில் சூரிய ஒளி படும்படி இருங்கள். இதனால் உடம்பில் வைட்டமின் D சத்து அதிகரிக்கும்.
8.ஒரு நாளைக்கு சராசரியாக 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் உடலில் சூடு குறையும்.
9. வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது தலை முடிக்கு நல்லது.
10. அதிக காரமான உணவு, ஆயில் உணவுகளை தவிர்ப்பது நல்லது.