தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் வருகிற அக்டோபர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இந்த காரணமாக மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தியது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர். இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ச்சியாக அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை விடப்படவுள்ளதாகவும், அதன் பிறகு 6ம் தேதி பள்ளிகள் திறப்பதும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.