Header Ads Widget

<

தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!! - TAMILNADU SCHOOL COLLEGE LEAVE HOLIDAY LATEST NEWS 2022



தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2 1/2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்களின் இயல்பு நிலை  திரும்பியது.   ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். 

மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை தோறும் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை பட்டியல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான முக்கிய தினங்களான 06.08.2022 அன்று குறை தீர்க்கும் நாளாகவும், 27.08.2022 சனிக்கிழமை CRC நாளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் :

03.08.2022-ஆடிப்பெருக்கு (புதன்)

05.08.2022-வரலட்சுமி விரதம் (வெள்ளி)

11.08.2022-யஜுர் உபகர்மா (வியாழன்)

12.08.2022-காயத்ரி ஜெபம்

ஆகஸ்ட் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள்:

09.08.2022-மொஹரம் பண்டிகை (செவ்வாய்)

15.08.2022-சுதந்திரதினம் (திங்கள்)

19.08.2022-கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளி)

31.08.2022-விநாயகர் சதுர்த்தி (புதன்)