Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் துலாம் ராசிக்கு வரும் யோகம் - SEPTEMBER MONTH THULAM RASI PALANGAL 2022


துலாம் :  துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசியில் 11 ஆம் வீட்டில் சூரியன் சேர்க்கை இருப்பதும் 7ஆம் வீட்டில் ராகு இருப்பது ஓரளவு நன்மை அளிக்கும். மன குழப்பங்கள் அவ்வப்போது வந்து போகும். சனிபகவான் பார்வை 10 ஆம் வீட்டில் இருப்பதால் வேலை பளு அதிகரிக்கும். பணியிடத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். விட்டு கொடுத்து போவது நல்லது. இந்த மாதம் பொறுமையும், அமைதியும் இருப்பது அவசியம்.

குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை விவாதங்கள் வந்து போகும். ஆகையால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அதிக நேரம் செலவழிக்க நிலை உருவாகும். வண்டி வாகனம் வாங்க வாய்ப்புகள் வரும். எனவே உங்கள் வாழ்க்கை துணையின் பெயரில் வாங்குவது  நல்லது. மாணவர்கள் படிப்பில் மந்த நிலை ஏற்படும். எனவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் எந்த ஒரு விசயத்தையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

தொழில் மற்றும் உத்தியோகம் செய்வபர்களுக்கு இந்த மாதம் சுமாராகவே இருக்கும். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கும். வேலை மாற்றம் செய்ய எண்ணம் வரும். இந்த மாதம் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை செவ்வாய் பகவான் வீட்டில் 7ல் இருப்பதால் எலும்பு, வயிறு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் வரும். ஆகவே உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பரிகாரம் :  பவுர்ணமி தினத்தன்று கன்னிமார்களுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள். குல தெய்வ வழிபாடு துன்பங்களை நீக்கி நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் நாட்கள் : செப்டம்பர் 16, 17