ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் சனி பாக்ய ஸ்தான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வதால் சாதகமான பலன்களை தருவார். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் தொடர்ந்து கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் எந்த மாற்றம் இருக்காது. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் பெறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். வரன்கள் பேசி முடிக்கலாம். காதலிப்பவர்களுக்கு அற்புதமான மாதம். திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடி வரும். பெண்கள் வண்டி வாகனம் வாங்கலாம். புதிய வீடு வாங்க முயற்சி செய்யலாம். இந்த மாதம் உடல் ஆரோக்கியம் சற்று ஏற்றம் இறக்கமாகவே இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தினால் உடலில் சுறுசுறுப்பு அதிகரித்து உற்சாகம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் தரும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு புரொமோஷன் சம்பள உயர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆகும்.
பரிகாரம் :
ஏழைகள் மற்றும் இயலாதவர்களுக்கு ஆடை, போர்வை தானம் செய்யவும்.