செப்டம்பர் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
மேஷம் : மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் எந்த வேலை, மற்றும் செயல் ஆகிய எதையும் பொறுமையாக செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். தாயின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களை சில குழப்பத்தை ஏற்படுத்தும் ஆகவே நீங்கள் அந்த எண்ணங்களை மனதில் நுழைய விடாதீர்கள். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் மாணவர்களின் கல்விக்கு சாதகமாக இருக்கும். காதல் கைகூடும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வந்து போகும். பண வரவுகள் நன்றாக இருக்கும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆறாம் வீட்டில் புதன் இருப்பதால் உடல் நலனில் சில பிரச்சனைகள் வரலாம், ஆகையால் கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் அரசு அதிகாரிகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மனதளவில் உற்சாகமும், பலமும் பெறுவீர்கள். இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வி திறன் அதிகரிக்கும். போட்டி தேர்வு போன்றவற்றில் வெற்றி கான்பீர்கள். குடும்பத்தில் சில சண்டைகள் வரலாம். இந்த மாதம் காதல் கசக்கும். நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பண வரவுகள் சுமாராக இருக்கும். அழகு, கலை மற்றும் நாகரிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
மிதுனம் : மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு நல்லுறவு ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, சந்தோசம் பெருகும். சமூக கெளரவம் கிடைக்கும். எந்த செயலும் உங்களுக்கு சாதகமாக முடியும். இந்த மாதம் உங்களுக்கு பல மகிழ்ச்சியை தரும் மாதமாக அமையும். உங்கள் தொழிலில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வித்திறன் கலவையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும். இந்த மாதம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதம் ஆகும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்வது அவசியம். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலை மாற்றம் செய்ய எண்ணங்கள் வரும். குடும்ப வாழ்க்கை இந்த மாதம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும். காதல் உறவுகள் சுமாராக இருக்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் கலவையான பலன்களை தரும். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
சிம்மம் : சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. சமூக மட்டத்திலோ அல்லது பணிபுரியும் இடங்கள் வியாபாரங்களில் உங்கள் வார்த்தைகளால் நீங்கள் ஒருவரை காயப்படுத்தலாம் ஆகவே கவனமாக பேசுங்கள். இந்த மாத தொடக்கத்தில் மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் நல்ல அனுகூலங்கள் தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவுகள் கலவையான பலன்களை தரும். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கன்னி : கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பணியிடத்தில் நல்ல ஆதரவை பெறுவீர்கள். சில சமயங்களில் உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்த யோகா அல்லது தியானத்தை மேற்கொள்ள வேண்டும். எந்த செயலும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். இந்த மாதம் பண வரவுகள் அதிகரிக்கும். ஆசைகளை குறைத்து கொள்வது நல்லது. திருமணம் காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த மாதம் உங்களுக்கு சமபலன்களை தரும்.
துலாம் : துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி அடையும். தொழிலதிபர்களுக்கு ஏற்றம் தரும். எந்த பணி செய்தாலும் உற்சாகமாக செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றியை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை சுப பலன்களை தரும். காதல் கைகூடும். பணவரவுகள் கலவையாக இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த மாத கடைசி வாரத்தில் உங்களுக்கு பல பெரிய பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் : விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அன்பு மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதம் நல்ல முடிவு கிடைக்கும். காதல் கைகூடும். மற்றவர்களுடன் பழகும் போது கவனம் தேவை, மென்மையாக பழகுவது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் சில கருத்து வேறுபாடு வந்து போகும். இந்த மாதத்தில் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராகவே இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. இந்த மாதம் உங்களுக்கு சமபலன்கள் தரும் மாதமாக இருக்கும்.
தனுசு : தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். ஆகையால் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. காதல் வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. மாணவர்கள் தங்கள் கல்வியில் கடினமாக உழைக்க வேண்டும். பண வரவு அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை இந்த மாதம் சாதகமான முடிவை தரும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும்.
மகரம் : மகர ராசி அன்பர்களே! தொழிலில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த மாதம் முடிவெடுப்பதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாணவர்களின் கல்வியை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சச்சரவுகள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கருத்தை விளக்க போராட வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். காதல் விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பணவரவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் உடல் நலனில் அக்கறை செல்லுவது நல்லது.
கும்பம் : கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை சுப பலன்களை பெறுவீர்கள். காதல் விவகாரங்கள் இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சில மனக்கசப்பு வந்து போகும். பண வரவுகள் நன்றாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து பழக வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை குளிர் சம்பந்தமான சில சிறிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
மீனம் : மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழிலை பொறுத்த வரை நல்ல பலன்களை பெறுவீர்கள். மாணவர்களின் கல்வியை பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. காதல் விவகாரங்கள் கைகூடும். நிதி நிலையை பொறுத்தவரை கலவையான பலன்கள் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எந்த செயலும் செய்யும் போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.