தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3வது அலையின் தாக்கம் ஏற்பட்டது. கொரோனா இரண்டாவது அலையில் பரவிய டெல்டா வகை வைரஸை விட மூன்றாம் அலையில் பரவிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் மூச்சு திணறல் ஆக்ஸிஜன் தேவை போன்ற சூழல் ஏற்படவில்லை. அதனால் சிறிது நாட்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்பின் ஊரடங்கு நீக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தற்போது ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர்க்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு BA4, 5 வகை வைரஸ் பாதிப்பு தான் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, மற்றும் மேலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பள்ளிகளில் நுழைவு வாசலில் சானிடைசர் பயன்படுத்துதல், உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளுதல் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கு காற்றோட்டம் நிறைந்த இடங்களில் பாடங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்ய்ய்யப்பட்டு வருவதால் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இன்னும் சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் என்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.