இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பள்ளிகள் மூட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தினசரி தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொது மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒரு நாள் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 2500 மேல் இருந்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளி நிர்வாகிகள் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தமிழக அரசிடம் பரிசீலினை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.