தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவின் மூன்றாவது அலையில் உருவான ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், 32 வகைகளில் உருமாற்றம் அடைய கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை சரிவடைந்த நிலையில், தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் மீண்டும் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லி மகாராஷ்டிரா கேரளா கர்நாடகா தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கில் தீவிர கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இந்தியாவில் BA 12345 வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்றின் புதிய வைரஸான BA2.75 வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த வகை வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் தன்மை உடையது என தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவை திருவள்ளூர் ராணிப்பேட்டை திருநெல்வேலி மதுரை கன்னியாகுமரி திண்டுக்கல் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10% தாண்டி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். அந்த வகையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கடைகள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறும் நபர்கள் மீதும் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் மாணவர்களின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் வகுப்புகள் அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, கடைகளுக்கான நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.