Header Ads Widget

<

கேஸ் சிலிண்டர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி - LGP GAS CYLINDER LATEST NEWS IN TAMIL



கேஸ் சிலிண்டர் உபயோகப் படுத்துவோர் பயன்பெறும் வகையில் 2 முக்கிய அறிவிப்புகள்  வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கிட்டதட்ட     ரூ.1000 ஐ தாண்டி விட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கருத்தில் கொண்டு  LPG நிறுவனங்கள் குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.
எல்பிஜி நிறுவனங்கள் கலப்பு எரிவாயு சிலிண்டர்களை அதாவது (COMPOSITE GAS CYLINDER) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை பொதுவான சிலிண்டரை விட மிகவும் குறைவாக இருக்கும். இந்த சிலிண்டரின் எடை சாதாரண சிலிண்டரை விட சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதாவது அதில் உள்ள வாயுவின் அளவு குறைவாக இருக்கும். இந்த சிலிண்டர் வெறும் ரூ.635க்கு கிடைக்கும். குறிப்பாக வீடுகளில் எரிவாயு பயன்பாடு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சிலிண்டர் மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை சென்னையில் ரூ.635 ஆக உள்ளது. இவை விரைவில் அனைவர்க்கும் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளதாக எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரூ.500 வரை கேஷ் பேக் 

PAYTM நிறுவனம் தற்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது PAYTM ஆப் மூலமாக முதன் முதலாக கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு ரூ.500 வரை கேஷ் பேக் கிடைக்கும் என அறிவித்துள்ளது.