வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் கொண்ட போட்டி தொடரை வென்றது. தற்போது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் களம் இறங்கினர். இதில் 16 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சரும் அடங்கும். பிறகு வந்த வீரர்களான எஸ். ஐயர் 0, பண்ட் 14, பாண்டியா 1, ஜடேஜா 16 என நடையை கட்டினர். ஆனால் ஒருபுறம் ரோஹித் சர்மா தனது அதிரடி வேட்டையை தொடர்ந்தார் 44 பந்துகளை சந்தித்த அவர் 64 ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார். இதில் அவர் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் பறக்க விட்டார்.
இந்திய அணி 138 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் தினேஷ்கார்த்திக்கும், ரவிச்சந்திரன் அஷ்வினும் ஜோடி சேர்ந்து கணிசமாக ரன்களை உயர்த்தினர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இறுதி ஓவர்களில் தனது அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தார் இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அஸ்வின் தன் பங்குக்கு 10 பந்துகளில் 13 ரன்களை சேர்த்தார் இதில் 1 சிக்ஸ்ர் அடங்கும். இந்த இருவரும் 7 வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் கடந்த தொடரில் ரன்களை சேர்ப்பதில் மிகவும் சிரமப்பட்டார். தற்போது பார்ம்க்கு திரும்பி அதிரடி வேட்டையில் இயங்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.