இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கனிஸ்தான் போன்ற அணிகளும் இந்த தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடியது. அதன் பிறகு அடுத்த மாதம் இரு அணிகளும் சந்திக்கின்றன.
டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் நிலையில், இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் வீரர்களுக்குக்கு நல்ல பயிற்சியாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத விருப்பத்தால் இரு நாடு ரசிகர்கள் மட்டுமின்றி உலக நாடுகளிலுள்ள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் கடைசி வரை எந்த அணிகள் வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆகவே எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.