இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு டெஸ்ட் T20 மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியை இழந்த இந்திய அணி T20 ஒரு நாள் தொடரை வென்றது. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை 12.07.2022 அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.
லண்டன் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இரு அணிகளும் ரன் குவிக்கும் என்று எரிதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஷிகர் தவான் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார். சூரியகுமார் யாதவ் நான்காவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக நடுவரிசையில் களமிறங்கவுள்ளார். பந்து வீச்சில் பும்ரா, முகமது சமி, ஜடேஜா, சஹால், தாகூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜேசன் ராய், பட்லர், ஸ்டோக்ஸ், பரிஸ்டோ, லிவிங்ஸ்டன், மெயின் அலி ஆகிய நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா, முகமது சமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சஹால் ஆகியோர் ஆடும் லெவன் உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கு நடைபெறுவதற்கு முன்பாக இதில் ஏதேனும் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.