Header Ads Widget

<

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2022 - AUGUST MONTH RASI PALAN HOROSCOPE 2022



மேஷ ராசி :

மேஷம் ராசி  அன்பர்களே ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலக் கோளாறுகள் வந்து போகும். பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதத்தில்  பணவரவுகள் அதிகரிக்கும். சனி வக்ரத்தால் வேலை, வியாபாரம் மந்தமாக இருக்கும். சுப நிகழ்வுகள் நடக்கும்.

ரிஷப ராசி :

ரிஷபம்  ராசி  அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். பண வரவுகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். வேலை சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வேலை வாய்ப்பு பதவி உயர்வு கிடைக்கும். வீடு, மனை, சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது. காதல் கை கூடும். இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமையும்.

மிதுன ராசி :

மிதுனம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு கலைவையான பலன்களை தரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். பெற்றோர்கள் வழியில் பண வரவு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தினால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். இந்த மாதம் எந்த வேலை செய்தாலும் அதற்கான பலன்கள் தாமதமாகவே கிடைக்கும்.


கடக ராசி : 

கடகம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாகும். நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எந்த வேலை செய்தாலும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் நல்ல பெயர், மரியாதையை அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.


சிம்ம ராசி : 

சிம்மம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உடல் நலக் கோளாறுகள் வந்து போகும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. போட்டிகள் அதிகரிக்கும். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். யாரிடமும் கோவப்படாமல் பொறுமையாக இருப்பது நல்லது.


கன்னி ராசி :

கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். தொழில் வியாபாரம் வேலை ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 


துலா ராசி : 

துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த மாதமாக அமையும். மாத தொடக்கம் உங்களுக்கு சாதகமாக அமையும். மாதத்தின் பிற்பகுதி சில பிரச்சனைகள் வரலாம். காதல், கல்வி, தொழிலில் நீங்கள் நேர்மையான முடிவுகளை பெறலாம். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதை தவிர்க்கவும். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். பண விஷயங்களில் யோசித்து முடிவு எடுக்கவும்.


விருச்சிக ராசி :

விருச்சிகம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும் மாதம் ஆகும். ஆனாலும் இந்த மாதம் சில சவால்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படவும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.


தனுசு ராசி :

தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு பல்வேறு துறைகளில் கலவையான பலன்களை தரும். மாத தொடக்கத்தில் எல்லா வழிகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில், வேலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடின உழைப்பால் வருமானம் அதிகரிக்கும். மன அழுத்தம் சில பிரச்சனைகள் வரலாம். திருமண முயற்சி கை கூடும்.


மகர ராசி : 

மகரம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். பொருளாதார சவால்கள் உண்டாகும். உங்களின் கடின உழைப்பால் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். குடும்ப வாழ்க்கை சாதகமாக அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். 


கும்ப ராசி : 

கும்பம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு  எந்த விஷயத்திலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில வேலைகளில் தடைகள் ஏற்படலாம். பண பிரச்சனைகள் வரும். முதலீடு செய்யும் போது வல்லுனர்களின் ஆலோசனை பெறுங்கள். பணியிடத்தில் கடும் போட்டி உண்டாகும். வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.


மீன ராசி :

மீனம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பண வரவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நற்செய்திகள் வரும். மாதத்தின் நடுவில் சில பிரச்சனைகள் வரலாம். குடும்ப வாழ்க்கை ஏற்றம் இறக்கமாக இருக்கும். நிதி நிலை மேம்படும்.