நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஓமிக்ரான் தொற்றின் திரிபான BA 1,2,3,4,5 வகை கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் மீண்டும் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லி மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவை கொரோனா நான்காவது அலையின் தொடக்கம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பில் சென்னையில் 50% உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் பொது மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவித்துனர். மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதமாக ரூ.500 விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் நுழைவு வாயில்களில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவை கொரோனா நான்காவது அலையின் தொடக்கம் என்பதால் இனிவரும் அடுத்தடுத்த நாட்களில் தினசரி பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதாலும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.