நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நாட்டின் பொருளாதாரமும், மாணவர்களின் கல்வி கற்றல் திறனும் மிகவும் பாதிக்கப்பட்டது. கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கில் தீவிர கட்டுப்பாடுகளும், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் ஈடுபட்டனர். இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனா மூன்றாவது அலையில் உருவான ஓமிக்ரான் தொற்றின் திரிபான BA2, BA4, BA5 வகை கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழ்நாடு கேரளா கர்நாடக மத்தியபிரதேசம் டெல்லி குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லுகரிகள் முகக்கவசம் அணிவது, உணவருந்தும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 4வது அலை பரவ தொடங்கி விட்டதா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்; தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்த்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளன. தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் பயப்படும் அளவிற்கு தொற்றுப் பரவல் இல்லை. இருந்தாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுகொளவது என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கத்தால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு. பேருந்து போக்குவரத்தில் புதிய மாற்றம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதில் புதிய மாற்றம் கொண்டு வரலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.