தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய பொருள்கள் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருள்களை பெறுவதற்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் தனது கைவிரல் ரேகை பதிவு செய்து பொருள்களை பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது. இதனால் ரேஷன் பொருள்களை உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த முறையால் வயதானவர்கள் மற்றும் ஒரு சில பேர்களுக்கு தங்களின் கைரேகையை பதிவு செய்தாலும் சரியாக பதிவதில்லை. இதனால் அவர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் தங்களின் கையொப்பமிட்டு பொருள்களை பெற்று வருகின்றனர். அத்துடன் மாற்றுதிறனாளிகள் கடைக்கு வராத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட பிரநிதிகள் மூலம் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து தமிழக உணவு துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை முறையில் பிரச்சனை வரும் போது அதற்கு பதிலாக கண் கருவிழி பதிவு மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்றும் பிறகு இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எப்போதும் போல நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் முறை வழக்கம் போல இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வெளியான அறிவிப்பு