இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் 2827 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 2858 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 11 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்களுக்கு 25 பேர்களுக்கும் பெண்களுக்கு 19 பேர்களுக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் தொற்று பதிவாகவில்லை.
இருந்தபோதிலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏற்றம் இறக்கமாக இருந்து வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்; தமிழகத்தில் பயப்படும் அளவிற்கு தொற்று பரவல் இல்லை. மக்கள் பயப்படவேண்டாம், இருந்தாலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனவை முற்றிலும் ஒழிக்க முடியும். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அனால் இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை பரவக்கூடும் என ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.