தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் சரிய தொடங்கியது. அதனை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் சென்ற மே 5ம் தேதி முதல் 12ம் வகுப்பிற்கு பொது தேர்வுகள் துவங்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வாறு பொது தேர்வுகள் நடைபெற்று வரும் நேரத்தில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்; 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. எனவே கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாநிலத்தில் 1000ல் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், தீவிரக்கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் தற்போது வாய்ப்புகள் இல்லை. அனால் தொற்றுப் பரவல் அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும். எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.