வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகளில் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கவும், பங்கு பரிவர்த்தனைகள், ரொக்க பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போதும், வீடு பதிவு செய்வது விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் ஆகிய அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய ஆதார் மற்றும் பான் கார்டு காட்டாயம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்ய அல்லது வாபஸ் பெறவும், வங்கியில் நடப்பு கணக்கை தொடங்கவும் நிரந்தர கணக்கு எண் (பான்) அல்லது பயோமெட்ரிக் ஆதாரை காட்டுவது கட்டாயம் என அறிவித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி செலுத்துவோர் தளத்தை விரிவுபடுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் ஆகிய அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய ஆதார் மற்றும் பான் கார்டு காட்டாயம் அதே போல வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கும் ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயமாகும். வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் நடப்பு கணக்கு (CURRENT ACCOUNT) தொடங்கவும், ரொக்க கடன் கணக்கு (CASH CREDIT ACCOUNT) தொடங்கவும் பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் வரும் மே 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் CASH டெபாசிட் செய்வதற்கு பான் எண் கட்டாயம் என்கிற நடைமுறை தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.