Header Ads Widget

<

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! | TAMILNADU RAIN LATEST NEWS TODAY

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு ஆசானி என பெயர் சூட்டப்பட்ட நிலையில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இந்த புயல் மிரட்டி வந்தது. இந்நிலையில் இந்த புயல் காரணமாக தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

15ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சிஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா முழு ஊரடங்கு அமல்