Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாணவர்கள் ஹேப்பி - TAMILNADU SCHOOL COLLEGE LEAVE HOLIDAY NEWS

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவல் குறைந்ததையொட்டி தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. இதனால் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டன. மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மாணவர்களும் பள்ளி இறுதி ஆண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாகக் கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் கோவில்கள் திறக்கப்படவில்லை. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் வருகிற ஏப்ரல் 13ம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் தேர்  திருவிழா நடைபெறயுள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும்  அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையை அந்த மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். 

மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்ட மே 14ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும்  அலுவலகங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வந்துவிட்டது கொரோனா 4வது அலை முழு ஊரடங்கு உறுதி