*நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இனி சிலிண்டர்களுக்கு பதிலாக பைப் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 82% நிலப்பரப்புக்கு பைப் மூலம் கேஸ் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் 98% மக்களுக்கு பைப் மூலம் கேஸ் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவாக்கப் பணிகள் வரும் மே மாதம் 12ம் தேதி தொடங்கப்படவுள்ளது. உள்கட்டமைப்புக்கான செயல் திட்டம் இனி உருவாக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளுக்கு பைப் மூலம் கேஸ் விநியோகிக்கப்படும். தொலைதூரப் பகுதிகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களுக்கு மட்டும் பைப் மூலம் கேஸ் விநியோகிக்கப்படாது. மேலும் இவை சிலிண்டரை காட்டிலும் பைப் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு விலை குறைவானது என்றும் பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாத மாதம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் அதிக விலை கொடுத்து கேஸ் சிலிண்டர்களை வாங்க சாமானிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு எல்பிஜி நிறுவனங்கள் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி எல்பிஜி நிறுவனங்கள் இணைந்து கலப்பு எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டரின் எடை சாதாரண கேஸ் சிலிண்டரை விட எடை குறைவானதாகவும் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் இந்த எரிவாயு சிலிண்டர் விலை ரூ.650/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவை தமிழக முழுவதுமுள்ள அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு வரும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
வந்துவிட்டது கொரோனா 4வது அலை தமிழகத்தில் முழு ஊரடங்கு!!
*இந்தியாவில் கச்சா எண்ணெய் உயர்வால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சிறியரக கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பம் தெரிவிக்கும் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.