தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை திருப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கேரளா, ஹரியானா, மிசோரம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவ தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்திலும் தற்போது கொரோனவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா தினசரி தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.