CENTRAL BOARD OF DIRECT TAXES சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க தவறினால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறுகிறது. பிரிவு 139ஏஏ இன் துணைப்பிரிவு (2) இன் விதிகளின் படி, பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் முறையின் கீழ் ஒவ்வொருவரின் ஆதார் எண்ணும், குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், கூறப்பட்ட துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தேதியிலோ அல்லது அதற்கு பின்னரோ ஆதார்-பான் இணைப்பை செய்யும் பட்சத்தில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால் ஆதார் பான் நம்பரை இணைக்காதவர்கள் உடனே இணைத்து விடுங்கள். அனைத்து வகையான பணப் பரிவர்த்தனைக்கும் பான் ஒரு முக்கிய KYC அளவுகோலாக இருப்பதால் வங்கிகள் நிதி சார்ந்த இணையதளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் காத்திருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்,. எனவே இப்போதே தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது ஜூன்30 2022-க்குள் ரூ.1000 அபாரதத்திலுந்து குறைந்தபட்சம் ரூ.500 சேமிக்க, உங்களின் பான் - ஆதாரை இணைக்கவும்.
ஆன்லைன் வழியாக பான் ஆதாரை இணைப்பது எப்படி
1. www.incometax.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
2. கம்ப்யூட்டர் SCREEN இல் இடது பக்கம் உள்ள குயிக் லிங்க்ஸ் பிரிவில் லிங்க் ஆதார் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
3. தற்போது புதிய விண்டோ தோன்றும். அதை பான் எண், ஆதார் டேட்டா, பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு நிரப்பவும்.
4. கொடுத்த தகவலை சரிபார்த்த பிறகு, I ACCEPT TO VALIDATE MY AADHAR DETAILS என்ற விருப்பத்தை தேர்ந்தேடுக்கவும். அதன் பிறகு CONTINEW என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பி வைக்கப்படும். தேவையான தகவல்களை உள்ளிட்டு VALIDATE என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் ஆதார் இணைக்கப்படும்.