நாளை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.