தமிழகத்தில் கொரோனா பரவல் மூன்றாவது அலை குறைந்ததையொட்டி தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் அண்டை நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா, தென்கொரியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரியா, அமெரிக்கா, சமோவா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் ஓமைக்ரான் வைரஸ் திரிபான XE என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸானது ஓமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவ கூடியது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த வைரஸால் 637 பேர் பாதிக்கப்ட்டுள்ளார் என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கிலாந்தில் அசுர வேகத்தில் கொரோனா பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆதார் பான் கார்டு உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா நான்காவது அலை வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸான XE தொற்று கண்டறியப்பட்டால் ஊரடங்கில் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி செலுத்தாதவர்களை விரைவில் செலுத்தும் படி தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்தால் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதன்படி இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, கடைகள் திறக்க நேர கட்டுப்பாடு, பொது போக்குவரத்திற்கு நேரக்கட்டுப்பாடு, பொது இடங்களில் கூட்டம் கூடத் தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.