நாடு முழுவதும் பொதுமக்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இவை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் சமையல் சிலிண்டர்களுக்கு மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கேஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிவாயு மற்றும் எரிபொருள்கள் விலையால் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே சுங்க கட்டணத்தின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிஉள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர்கள் விலை கிட்டத்தட்ட ரூ.1000 நெருங்கி விட்டது. இவ்வாறு விலை அதிகரிப்பால் ஏழை எளிய மக்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர் இருக்கும் குடும்பத்திற்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மண்ணெண்ணெய்யும் வாங்கமுடியாமல், கேஸ் சிலிண்டரையும் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே எரிவாயு மற்றும் எரிபொருள்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும், கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.100 வழங்கப்படும் என அறிவித்த தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்குக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இனி ஆண்களுக்கும் இலவச பஸ் அறிவிப்பு
எனவே இந்த கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு இதை பற்றி ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கேஸ் சிலிண்டர்களுக்கு மானிய தொகை ரூ.100 வழங்கப்படும் என்றும் அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்ட்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.