இந்தியாவில் பொதுமக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக கேஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
டிஜிட்டல் முறையில் ரசீது
இந்தியாவில் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் அலையின் போது மக்களின் நலன் கருதி இலவசமாக உணவு தானியங்கள், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும். அதன்படி விரைவில் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும், கேஸ் சிலிண்டர் விலை என்ன என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் மானியம் 3 முக்கிய அறிவிப்பு
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் போது வாடிக்கையாளரிடம் காகித ரசீதுகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் காகிதத்தின் தேவை அதிகரித்தது. அதனால் காகித பயன்பாட்டை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இண்டேன் சமையல் சிலிண்டரை பெரும்போது இனி டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி காகிதமில்லா புதிய நடைமுறை பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் ரசீதுகளை https://cx.indianoil.in என்ற இணைய முகவரிக்கு சென்றும் பார்க்கலாம். காகித ரசீதுகளை பெற விரும்புபவர்கள் இந்தியன் ஆயில் ஒன் ஆப் எனும் செயலி அல்லது தங்களது எரிவாயு விநியோகஸ்தரிடம் கேட்டு பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.