இந்த நிலையில் தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கும், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்ற தமிழக முதல்வர் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளதை போன்று, ஆண்களுக்கும் இலவச சலுகை வழங்கலாமா என உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் முதற்கட்டமாக நோயாளிகள் மருத்துமனைக்கு செல்லவும், அரசு தேர்வு எழுத செல்லும் அனைத்து மாணவர்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்க திட்டமிட்டு வருவதாகவும், அதன் பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கும் வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கும் அனுமதி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று அரசு துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தகவல் மூலமாக ஒட்டுமொத்த ஆண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.