இந்தியாவில் கொரோனா 3வது அலை கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது புதிய அதிர்ச்சி தகவலாக கொரோனா 4வை அலை வருகிற மே மாதம் பரவ தொடங்கும் என பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் மிகவும் பாதிப்படைந்தன. கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையான டெல்ட்டா வகை கொரோனா வைரஸ் அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 லட்சத்திற்கும் மேலாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா மூன்றாவது அலையான ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தீவிரமாக பரவிய போதும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை நீடிக்கும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த கொரோன நான்காவது அலை குறைந்தது 4 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறியிருந்தனர். இந்த புள்ளி விவரம் கடந்த பிப்ரவரி 24 அன்று MEDRXIV ப்ரிப்ரின்ட் சர்வரில் வெளியிடப்பட்டது. அதில் கொரோனாவின் 4வது அலை ஆகஸ்ட் 15 முதல் 31ம் தேதி வரை உச்சத்தை எட்டும் என்றும் அதன் பிறகு படிப்படியாக குறையும் என்று கணித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது லூதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வு முடிவுகளில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதிய உருமாற்றம் அடைந்த பிஏ2 வகை கொரோனா வைரஸின் 4வது அலை வருகிற மே மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் பரவியவர்களுக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கொரோனா இரண்டாவது அலையானா டெல்ட்டா வைரஸை போல பாதிக்கப்பட்டவர்களின் நுரையீழலை தாக்கும் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் கொரோனா நான்காவது அலை இந்தியாவில் பரவ தொடங்கினால் அவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கொரோனா 4வது அலையால் இந்தியாவில் மீண்டும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.