Header Ads Widget

<

ஆதார் பான் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 3 முக்கிய அறிவிப்பு - TAMILNADU AADHAR PAN RATION CARD NEWS 2022

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளில் ஆதார் கார்டு ஒன்றாகும். மத்திய மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண்  கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், வங்கிகள், செல்போன் சிம் கார்டு, நீட் தேர்வு, சிபிஎஸ்இ, யுஜிசி பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வருமானவரி ஆகிய அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதே போல வருமான வரிச் சட்டப்படி, பான் கார்டு அவசியமாகும். இந்த பான் கார்டு வருமான வரித் துறையினரால் வழங்கப்படும் 10 இலக்கங்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் ஆகும். அதாவது மோட்டார் வாகனம் வாங்கவும் விற்கவும், கிரெடிட் கார்டு வாங்கவும், வங்கிகளில் ரூ.50000 மேல் ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்யவும், வருமானவரி தாக்கல் போன்ற பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். ரூ.500000 மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள்  வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கு பான் கார்டு அவசியமாகும்இந்த நிலையில் வரி ஏய்ப்பு போன்ற முறைகேடுகளை தடுக்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று  மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். அதற்குள்  ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு 

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை பெற ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்தான் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். எனவே இதுவரை ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைக்காதவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இணைக்காத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கார்டு மையத்திலோ அல்லது இ-சேவை மையத்திலோ தங்களுடைய ஆதார் மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டை எடுத்து சென்று இணைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி