Header Ads Widget

<

தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு எதற்கெல்லாம் தெரியுமா? | TAMILNADU HOLIDAY LATEST NEWS TODAY 2022



தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றன. தற்போது நர்சரி வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 16 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெறாமல்  இருந்தது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், வருகிற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பகுதிகள் தவிர்த்து மற்ற வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியர் குழுமம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.


பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 19ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு 4 முதல் 5 நாட்கள் வரை தொடர் விடுமுறையாக அளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என கூறுகின்றனர்.