Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை - TAMILNADU SCHOOL COLLEGE LEAVE HOLIDAY NEWS 2022


தமிழகத்தில் கொரோனா 3 வது அலை கடந்த மாதம் வேகமாக பரவி தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் பிறப்பித்தது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அளித்தது. தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. மேலும் பிப்ரவரி மாதம் முதல் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் முழு நேர நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு     வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 22 முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு