Header Ads Widget

<

தமிழகம் முழுவதும் மார்ச் முதல் ரேஷன் அட்டைகளுக்கு மாதம் ரூ.1000 - TAMILNADU RATION CARD NEWS TODAY 2022



தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ்  குடும்ப அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக  அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பல சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகை பொருள்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பண்டிகைக்கு தேவையான இலவச அத்தியாவசிய பொருள்கள் வழங்கி வருகிறது. இவ்வாறு பல சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால் பல மாதங்கள் கடந்தும் இன்னும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் பொதுமக்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் உடனே இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின் குடும்ப  தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் தனது வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இந்த உரிமை தொகை திட்டத்தை வருகிறது மார்ச் 1ம் தேதி முதல் வழங்கப்படலாம் என்றும் அல்லது மகளிர் தினத்தன்று மார்ச் 8ம் தேதி தமிழ்நாடு தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும். இந்த உரிமை தொகையை தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு 

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது வேலை நேரம், பொருள்களின் இருப்பு விவரம், விடுமுறை நாட்கள், விநியோகம் செய்யப்பட்ட பொருள்களின் விபரம், விற்பனை விலை ஆகியவற்றை ரேஷன் கடைகளின் முன்பு அறிவிப்பு பலகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடை குறித்து புகார் தெரிவிக்க உணவுத் துறை அமைச்சர் 04425671427, உணவுத்துறை செயலாளர் 04425672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 04428592255 ஆகியோரின் எண்களும் பலகையில் இடம் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கு