நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா கால கட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இலவச உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கின. தமிழக அரசு சார்பில் முதல்வர் முக ஸ்டாலின் குடும்ப அட்டைதாரகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 வகை அத்தியாவசிய மளிகை பொருள்களை ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கினார். மேலும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே கிடைக்கும் படி வழி வகை செய்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது 3 லட்சம் பொது சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உட்பட ஏராளமான சேவைகளை எளிமையாக பெற முடிகிறது. அந்த வகையில் மத்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டதின் கீழ் 6 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அதன் படி வரும் நாட்களில் 10000 கூடுதல் பொது சேவை மையங்களை ரேஷன் கடைகளிலேயே பொது மக்களால் நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். கிராமப்புறம் மக்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே ஆதார், பான் கார்டு, வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள், பென்ஷன், இன்சூரன்ஸ், டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இதனால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ரேஷன் கார்டுகள்
புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பே உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரே நேரத்தில் பல பேர் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அடுத்த மாதம் ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்கும் வகையில் இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000
திமுக தேர்தல் அறிக்கையான குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை கணக்கெடுக்கும் பணியும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் வருகிற மார்ச் மாதம் மகளிர் தினத்தன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் தொடங்கி வைப்பார் எனக் கூறப்படுகிறது.