Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு ? -TAMILNADU SCHOOL COLLEGE CLOSED NEWS TODAY 2022


மிழகத்தில்  ஓமிக்ரான்  மற்றும் கொரோனா 3ம் அலை காரணமாக ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தினசரி பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதன் காரணமாக தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்தது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.  இதில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கக்கூடாது என்றும் இன்னும் சிறிது நாட்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

ஏனெனில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் தான் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 1 முதல் 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்கள் கொரோனவால் பாதிக்கப்படக்கூடும் என்ற சூழல் உருவாகிவிடும். இது தவிர தமிழகத்தில் தற்போது முழுமையாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப் படவில்லை, பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவில் இருந்தது வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கையை அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விதித்துள்ளனர். எனவே இந்த கோரிக்கைகளை தமிழக அரசு மறுபரிசீலினை செய்து பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை